| ADDED : செப் 04, 2026 09:12 AM
புதுச்சேரி: குடிமை பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு அவசரகால பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீயணைப்புத் துறை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை தலைமை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி, நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 244 மாவட்டங்களில் குடிமைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பில் 360 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 7 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமின் நிறைவு நாளில், பயிற்சியில் பங்கேற்ற 377 தன்னார்வலர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கலெக்டர் குலோத்துங்கன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.