உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொலையான பேக்கரி உரிமையாளரின் மனைவியிடம் ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டல்

கொலையான பேக்கரி உரிமையாளரின் மனைவியிடம் ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டல்

வில்லியனுார் : படுகொலை செய்யப்பட்ட பேக்கரி உரிமையாளரின் மனைவியிடம் ரூ. 20 லட்சம் கேட்டு மொபைல் போனில் மிரட்டியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, மடுகரை மெயின்ரோடு, ஏம்பலம்டி.வி., நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல்; வில்லியனுார் பைபாஸ் கூடப்பாக்கம் சாலையில் ஆனந்தேஸ்வரர் பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பணம் கொடுக்கல் பிரச்னையில், கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளியால் வஜ்ரவேல் படுகொலை செய்யப்பட்டார்.தற்போதுவஜ்ரவேல் மனைவி வள்ளியம்மாள், 46, பேக்கரியை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி மாலை 6:30 மணியளவில் கடையில் இருந்தவள்ளியம்மாள் மொபைல் போனுக்கு வந்த அழைப்பில் 'நான் தாடி அய்யனார் பேசுகிறேன். நான் தான் உன் கணவனை கொலை செய்தேன். எனக்கு உடனடியாக 20 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் என்னுடைய கூட்டாளிகள் உன்னையும் கொலை செய்துவிடுவார்கள்' என, மிரட்டியுள்ளார்.இது குறித்து வள்ளிம்மாள் வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப் பதிவு செய்து,மிரட்டல் வந்த மொபைல் போன் நெம்பரை யார் வைத்துள்ளது. தாடி அய்யனார் தற்போது கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர், எப்படிபேசினார். அல்லது அவரது பெயரில் வேறு யாராவது பேசினாரா?எங்கிருந்து அழைப்பு வந்தது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டல் சம்பவம் வில்லியனுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை