உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் குளம் மழைக்கு நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்தது

கழிவுநீர் குளம் மழைக்கு நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்தது

திருக்கனுார் : திருக்கனுார் கழிவுநீர் செல்லும் வண்ணாங்குளம் நிரம்பி, குடியிருப்புகளை சூழ்ந்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.திருக்கனுார் பஜார் வீதி மற்றும் வணிகர் வீதி உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மண்ணாடிப்பட்டு செல்லும் சாலையில் உள்ள வண்ணாங்குளத்தில் சென்று சேர்கிறது. நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வண்ணாங்குளத்தில் தண்ணீர் நிரம்பியது.அதனை வெளியேற்ற பயன்படுத்தப்பட்ட நீர் மோட்டார் மின்தடை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் இயக்கப்படவில்லை. இதனால், குளம் முழுதும் நிரம்பிய தண்ணீர் வெளியேற வழியின்றி, அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் புகுந்தது. இதனால், அங்கு பயிரிடப் பட்டிருந்த மஞ்சள் செடிகள், காராமணி, உளுந்து பயிர்கள் மூழ்கின. மேலும், குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்த பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தேவேந்திரன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று காலை அப்பகுதியை பார்வையிட்டு குளத்தில் நிரம்பிய தண்ணீரை ஜெனரேட்டர் உதவியுடன் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், அருகில் உள்ள ஏரிக்கு மதகு வழியாக மழைநீரை வெளியேற்றும் பணியிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்