உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருவாபரண மகர சங்கராந்தி விழா

திருவாபரண மகர சங்கராந்தி விழா

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிபுரம் அய்யப்பா சேவா சங்கம் சாார்பில், 'திருவாபரண மகர சங்கராந்தி' விழா பாரதிபுரம் ஐயப்ப சுவாமி கோவிலில் நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் 25 கலசாபிஷேகம், அஷ்ட அபிஷேகம், சந்தன அபிஷேகம் நடந்தது. சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியொட்டி, சபரிமலையில் நடைபெறுவதைப் போல் சிறப்பு மகர சங்கரம நெய் அபிஷேகம் காலை 8:55 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு நடந்தது. மாலை 4:30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலமாக மாலை 6.00 மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்தது. பின் 6.45 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணங்கள் சாத்தப்பட்டு, பிரம்மஸ்ரீ கண்டாரு மேஹஷ் மோகனரு தலைமையில் தரிசனம் மற்றும் மகரஜோதி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !