உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கடலில் அலை சீற்றம்

புதுச்சேரி கடலில் அலை சீற்றம்

புதுச்சேரி: அக்வான் புயல் காரணமாக புதுச்சேரி கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. அக்வான் புயல் வடக்கு ஆந்திரா மாநிலம், தெற்கு ஒடிசா கடற்கரைக்கு இடையே இன்று (நவ.,20) கரையை கடந்தது. அதனை அடுத்து, புதுச்சேரி கடலில் இன்று காலையில் இருந்து மாலை வரை அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டது. புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கடற்கரையில் நின்று கொண்டு, வேகமாக வீசிய அலை சீற்றத்தை பார்த்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்து வெளியேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை