புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வில்லியனுார்: கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் திருக்காமீஸ்வரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி புகையிலை கட்டுபாடு நோடல் அதிகாரிகள் தமிழ்மதி, மதுமதி ஆகியோர் மாணவர்களிடம் புகையிலையால் ஏற்படும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினர். பள்ளி மாணவர்களின் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடந்தது. அறிவியல் ஆசிரியை அனுசுயா நன்றி கூறினார். புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.