உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்று அரசு பொது விடுமுறை

இன்று அரசு பொது விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று (3ம் தேதி) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் (தொழில்முறை கல்லுாரிகள்) உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், இன்று (3ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் 25ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சார்பு செயலர் கிரண் வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள அறிவிப்பு: புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (3ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ