உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் டிராபிக் ஜாம்

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் டிராபிக் ஜாம்

வானுார்:: தொடர் விடுமுறை காரணமாக சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளால், இடையஞ்சாவடி - கோட்டக்கரை சாலையில் போக்குவரத்து பாதித்தது.தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நேற்று காலை முதல் மாலை 6:00 மணி வரை சுற்றுலா பயணிகள், ஏராளமான சுற்றுலா பயணியர் விசிட்டர் சென்டர் பார்க்கிங் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வந்ததால், இடையஞ்சாவடி - கோட்டக்கரை சாலையில் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து, போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.தகவலறிந்த ஆரோவில் போலீசார் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை