மேலும் செய்திகள்
தமிழக கவர்னருடன் மாஜி சபாநாயகர் சந்திப்பு
20-Sep-2026
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் தி.மு.க., எம்.எல்.ஏ., விக்னேஷ் பேசியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவர்னர் உரை தொடங்கப்பட்டது. இது ஒன்று தான் பட்ஜெட்டில் பாராட்டுக்குரியது. ராஜ்பவன் தொகுதியில் பல பிரச்னைகள் உள்ளது. ஆனால் கவர்னர் உரையில் ராஜ்பவன் தொகுதி குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. வைத்திக்குப்பம், குருசுகுப்பம் மீனவர்கள் துாண்டில் முள் வளைவு தொகுதியில் அமைக்க வேண்டும் என, பல ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாாதாரம், பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் கவர்னர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை. புதுச்சேரி அரசு மருத்துவமனை இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். சின்னையாபுரம், குமரகுருபள்ளம் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இது குறித்த அறிவிப்பு கவர்னர் உரையில் இல்லை. நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. வீட்டை விட்டு பொதுமக்களால் வெளியே வரமுடியவில்லை. போக்குவரத்து நெரிசலை தொலைநோக்கு பார்வையுடன் தீர்க்க நிரந்தர தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
20-Sep-2026