| ADDED : டிச 27, 2025 05:16 AM
புதுச்சேரி: காலப்பட்டு வேளாண் அலுவலகம் சார்பில், இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி கணபதி செட்டிக்குளத்தில் நடந்தது. வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார். இணை வேளாண் இயக்குநர் ஆல்பர்ட், இயற்கை வேளாண்மை முக்கியத்துவம் குறித்து விளக்கினார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் அமலோற்பவம் நாதன், மண்புழு உரம் தயாரிப்பு குறித்தும், பேராசிரியர் மணிமேகலை பூச்சி, நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும், விவசாயி பூங்குன்றன், இயற்கை முறையில் இடுபொருட்கள் தயாரிப்பது குறித்தும் விளக்கினர். வேளாண் வேதியியல் துறை அலுவலர் அனுப்குமார், மண்வள அட்டை மற்றும் மண் மாதிரி எடுப்பது குறித்து விளக்கினார். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவியாளர்கள் இளங்கோ, மாதவன் செய்திருந்தனர்.