ஆம்னி பஸ்களில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
புதுச்சேரி: ஆம்னி பஸ்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், ஆர்.டி.ஓ., பிரபாகரராவ் ஆகியோரின் உத்தரவுப்படி, போக்குவரத்து உதவி மோட்டர் வாகன ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் மரப்பாலம், எல்லைபிள்ளைச்சாவடி, இந்திராகாந்தி சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கெொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் டூ வீலரை வாடகை எடுத்து ஓட்டிய 4 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பர்மிட் காலவதியான ஒரு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆம்னி பஸ்களில் தீயணைப்பு அணைப்பான், அவசரகால வழிகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். மொபைல் போனில் பேசியபடி டூ வீலர் ஓட்டியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.