இரு தரப்பு மோதல் : 8 பேர் மீது வழக்கு
பாகூர்: நிலம் தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகூர் அடுத்த குடியிருப்புபாளையத்தை சேர்ந்தவர் அருள்ராஜன் மனைவி உஷா 48; அதே ஊரை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி மணிமேகலை, 41. இவர்கள் இரு தரப்பபினருக்கும் இடையே, நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி காலை, சம்மந்தப்பட்ட இடத்தில் இருந்து செடி, கொடிகளை, சுத்தப்படுத்துவது தொடர்பாக, தகராறு ஏற்பட்டது. அப்போது, இரண்டு தரப்பினரும், ஒருவரை ஒருவர் ஆபசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்து கொண்டனர். இது குறித்து, உஷா அளித்த புகாரின் பேரில், பக்தவச்சலம், பழனிவேல், பத்மநாபன், உமா, மணிமேகலை ஆகியோர் மீதும், மணிமேகலை அளித்த புகாரின் பேரில், வில்மணி, அருள்தாஸ், ஏகாம்பரம் மீதும், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.