மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
3 hour(s) ago
பீகார் தேர்தலில் வெற்றி: பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கல்
3 hour(s) ago
புகையிலை விழிப்புணர்வு முகாம்
3 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான பட்டானுாரை சேர்ந்தவர் கமலேஷ், 20; இவர், பெண் ஒருவரை காதலித்தார். இதையறிந்த தட்டாஞ்சாவடி ஞானதியாகுநகர் ரிச்சர்டு மற்றும் அவரது மகன் விபிஷன் கமலேைஷ கண்டித்ததுடன், தாக்கினர். ஆத்திரமடைந்த கமலேஷ், தனது நண்பரான சாரம் ரவுடி விஜய், 25; என்பவருடன் இணைந்து கடந்த 4ம் தேதி ரிச்சர்டு வீட்டினுள் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசினர். புகாரின் பேரில், டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மறுநாள் இருவரும் புதுச்சேரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின், சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி கோரி இருந்தனர். கோர்ட் உத்தரவின் பேரில், டி. நகர் போலீசார் நேற்று முன்தினம் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். பின், நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago