சுப்பையா பள்ளியில் சீருடை வழங்கல்
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவசங்கர் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள், அடையாள அட்டை மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர்கள் பாஸ்கரன், ரமேஷ் ஆகியோர் நிகழ்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.