உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலை.,யில் சர்வதேச மாநாடு மத்திய அமைச்சர் முருகன் துவக்கி வைப்பு

புதுச்சேரி பல்கலை.,யில் சர்வதேச மாநாடு மத்திய அமைச்சர் முருகன் துவக்கி வைப்பு

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மனோவசியம் குறித்த சர்வதேச மாநாடு துவங்கியது. மத்திய அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார்.இந்தியப் பள்ளி உளவியல் சங்கம், வடோதரா ஹிப்னாஸிஸ் அகாடமி சார்பில், இருநாள் சர்வதேச மாநாடு துவக்க விழா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி பல்கலைக்கழகத்துணை வேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். பதிவாளர் ரஜினிஷ் பூடானி வரவேற்றார். பேராசிரியர் பாஞ்ராமலிங்கம் நோக்கவுரையாற்றினார். மாநாட்டினை மத்திய இணை அமைச்சர்முருகன் துவங்கி வைத்து, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், மற்றும் தலைமைத்துவ விருதுகள் வழங்கினர்.தொடர்ந்து, பேராசிரியர் பாஞ்ராமலிங்கம் எழுதிய உளவியல் சொற்களஞ்சியம் என்ற நுாலினை வெளியிட்டார்.சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினர். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத் துணை வேந்தர் மோகன் சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து, நடந்த சிறப்பு அமர்வுகளில் மனோ வசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் 6 சிறப்பு பொழிவுகளும் 16 அழைப்பு பொழிவுகளும் இடம் பெறுகின்றன. 32 ஆய்வு கட்டுரைகளும் இரண்டு சிறப்பு அமர்வு களும் இடம் பெறுகின்றன.நிறைவு விழாவில், லண்டன் உளவியல் அறிஞர் கலாநிதி அமிர்தலிங்கம் பகீரதன் சிறந்த ஆய்வாளர்களுக்கான பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.புதுச்சேரி பல்கலைக்கழக பண்பாடு மற்றும் பண்பாட்டு உறவுகள் இயக்குநர் கிளமெண்ட் சகாயராஜா லுார்து நிறைவுரையாற்றுகிறார். இருநாள் சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை