மேலும் செய்திகள்
தொகுதி மேம்பாட்டு பணி ஆலோசனை கூட்டம்
1 minute ago
இன்றைய மின்தடை
1 minute ago
புதுச்சேரி: ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டம் இ.கம்யூ., முதலியார் பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது. அக்ரிமுருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முருகன், சிவாஜி, சங்கர், குலசேகரன், கீதநாதன், புருஷோத்தமன் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தலைவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பளராக இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி எஸ்.கே.எம் அமைப்பு அமைக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி எஸ்.கே.எம்., தலைவராக கீதநாதன்,பொது செயலாளர் அக்ரி முருகன், பொருளாளராக சங்கர், துணை தலைவராக குலசேகரன், செயற்குழு உறுப்பினர்களாக புருஷோத்தமன், ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வரும் 26ம் தேதி சுதேசி காட்டன் மில் அருகில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1 minute ago
1 minute ago