| ADDED : மார் 19, 2024 05:24 AM
புதுச்சேரி: இந்திய பொது நிர்வாக நிறுவனம் புதுச்சேரி கிளை சார்பில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு யு.பி.எஸ்.சி., போட்டித்தேர்வு கருத்தரங்கம் துவக்க விழா மேலாண்மை கருத்தரங்க கூடத்தில் நடந்தது.பேராசிரியை சாருமதி வரவேற்றார். இந்திய பொது நிர்வாக நிறுவனம் பொது இயக்குனர் திருபாதி, பல்கலைக்கழக பதிவாளர் அமிதாப் ரஞ்சன் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கி, மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும், எதிர்கால அனைத்து துறை வேலை வாய்ப்புகள், போட்டி தேர்வுக்கான அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டு அரசு துறைகளில் உயர்ந்த வேலை வாய்ப்புக்களை பெறவேண்டும் என்றார்.இந்திய பொது நிர்வாக நிறுவனம் புதுச்சேரி கிளை தலைவர் தனபால் போட்டித் தேர்வுகளை எப்படி மாணவர்கள் எதிர்கொள்வது குறித்து பேசினார். மோலாண்மைத் துறை பேராசிரியர் காசிலிங்கம் சிறப்புரையாற்றினார்.பல்கலைக்கழக அம்பேத்கர் மைய ஒருங்கிணைப்பாளர் பிரவின், ஜெயவிஜயன் ஆகியோர் யு.பி.எஸ்.சி., தேர்வுகான பயிற்சி குறித்து விளக்கி பேசினார்.உதவி பேராசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார்.