உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் 30ம் தேதி யு.பி.எஸ்.சி., தேர்வு 

 புதுச்சேரியில் 30ம் தேதி யு.பி.எஸ்.சி., தேர்வு 

புதுச்சேரி: புதுச்சேரியில் யு.பி.எஸ்.சி., தேர்வு வரும் 30ம் தேதி மூன்று மையங்களில் நடக்கிறது. புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அரசு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி. எஸ்.சி.,) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் மற்றும் அமலாக்க அதிகாரி, கணக்கு அதிகாரி ஆகிய பதவிகளுக் கான ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்பு சேர்ப்பு தேர்வு நாளை மறுநாள் 30ம் தேதி காலை 9:30 முதல் 11:30 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வு, புதுச்சேரி, லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகூர் கலை அறிவியல் கல்லுாரி, முத்தியால்பேட்டை பாரதி தாசன் மகளிர் அரசு கல்லுாரி ஆகிய மையங்களில் நடக்கிறது. இத்தேர்வை புதுச்சேரியில் 1,209 பேர் எழுதுகின்றனர். தேர்வர்களுக்காக புதுச் சேரி பஸ் நிலையத்தில் காலை 8:00 மணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மீண்டும் 12:00 மணிக்கு தேர்வு மையங்களில் இருந்து தேர்வர்கள் திரும்புவதற்கும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ