| ADDED : நவ 21, 2025 05:58 AM
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என என்.ஆர்.காங்., வலியுறுத்தியுள்ளது. உழவர்கரை பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, என்.ஆர்.காங்., பிரமுகர் நாராய ணசாமி கேசவன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜிடம் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: உழவர்கரை தொகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாலையில் செல்வோர்களையும், குழந்தைகளையும் துரத்தி கடிக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் பொதுமக்கள் நாய்கடிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உழவர்கரை தொகுதியில் அதிகரித்துள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவினை பெற்றுக்கொண்ட ஆணையர், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஊர் பிரமுகர்கள், உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உடனிருந்தனர்.