உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (2026–27) நடப்பு கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்த து. விழாவிற்கு புதியதாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாபீத் நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்லுாரி இயக்குநர் டாக்டர் ரத்னசாமி முன்னிலை வகித்தார். உடலியங்கியல் துறைப் பேராசிரியர் டாக்டர் லதா வரவேற்றார். முன்னதாக முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளை நிர்வாகி ராதா குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கிவைத்தனர். விழாவில் வெங்கடேஸ்வரா வித்யாபீத் நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தர் ராமச்சந்திரன், தலைமைச் செயல்பாட்டு அலுவலர் டாக்டர் வித்யா, மருத்துவக் கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்தி பேசினர். விழாவில் வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் உயர் நிர்வாக அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் இளங்கதிர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி