| ADDED : டிச 03, 2025 06:01 AM
புதுச்சேரி: த.வெ.க., விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் நடத்த அனுதிக்கக்கூடாது என, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில், த.வெ.க., தலைவர் விஜய் நடத்த அனுமதி கோரிய 'ரோடு ேஷா'விற்கு அனுமதி மறுத்த போலீசார், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர். அதனையொட்டி, த.வெ.க.,வின் ஆதவ் அர்ஜூனா, பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய நேற்று பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். அதில் லாஸ்பேட்டை 'ெஹலிபேடு' மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக பார்வையிட்டுள்ளனர். பிரபல நடிகரான விஜயை பார்க்க, புதுச்சேரி மட்டுமன்றி, அருகாமையில் உள்ள தமிழக கடலுார், விழுப்புரம் மாவட்ட மக்களும் கூடுவார்கள். குறைந்தபட்சம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட வாய்ப்புள்ளது. அவ்வளவு பெரிய கூட்டம் கூடுவதற்கும், அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதி லாஸ்பேட்டை 'ெஹலிபேடு' மைதானத்தில் இல்லை. மேலும் இந்த மைதானத்திற்கு செல்ல 'ஏர்போர்ட்' சாலை மற்றும் கல்லுாரி சாலை ஆகிய இரு சாலைகள் மட்டுமே உள்ளன. இந்த சாலைகள் குறுகலாக உள்ளதால், மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அவர்களை மீட்டு வருவதிலும் பெரும் சிக்கல் ஏற்படும். அதனால், த.வெ.க., விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு லாஸ்பேட்டை 'ெஹலிபேடு' மைதானத்தில் போலீசார் அனுமதி தரக்கூடாது. உப்பளம் புதிய துறைமுக மைதானம் அல்லது நகருக்கு ஒதுக்குப்புறமான திறந்து வெளியில் நடத்த அனுமதி தர வேண்டும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் த.வெ.க.,வினரும், போலீசார் கூறும் அறிவுரையை ஏற்று அவர்கள் அனுபவத்தில் அடிப்படையில் கூறும் இடங்களில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து நிகழ்ச்சியை நடத்த முன்வர வேண்டும் என, பொதுமக்கள், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றனர்.