உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராம உதவியாளர், எம்.டி.எஸ்., போட்டி தேர்வு; 81 மையங்களில் 15,350 பேர் பங்கேற்பு; 14,428 ஆப்சென்ட்

கிராம உதவியாளர், எம்.டி.எஸ்., போட்டி தேர்வு; 81 மையங்களில் 15,350 பேர் பங்கேற்பு; 14,428 ஆப்சென்ட்

புதுச்சேரி; புதுச்சேரியில் 81 மையங்களில் நடந்த கிரா ம உதவியாளர், பல்நோக்கு ஊழியர் போட்டி தேர்வினை 15,350 பேர் எழுதினர். புதுச்சேரி வருவாய் துறையில் காலியாக உள்ள 54 கிராம உதவியாளர், 9 பல்நோக்கு ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 29,778 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான போட்டி தேர்வு நேற்று காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடந்தது. புதுச்சேரியில் 61 மையங் கள், காரைக்காலில் - 10, மாகே - 3, ஏனாம் - 7 என மொத்தம் 81 மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 15,350 பேர் எழுதினர். 14,428 பேர் பங்கேற்கவில்லை. காலை 8:00 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடந்தது. தேர்வர்களின் வருகை பையோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையத்திற்குள் மின்னணு சாதனங்கள், புளூ டூத், கால்குலேட்டர், பென்-டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டது.தொடர்ந்து கிராம உதவியாளர், பல்நோக்கு ஊழியர்கள் போட்டி தேர்விற்கான ஆன்சர் கீ வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசல்ட் எப்போது புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் போட்டி தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் அனைத்து சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன. நாளை 14ம் தேதி கிராம உதவியாளர், பல்நோக்கு ஊழியர் பணியிடத்திற்கான ரிசல்ட் வெளியிட நிர்வாக சீர்திருத்த துறை திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை