உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரெஸ்ட்டோ பாரை மூடக்கோரி கிராம மக்கள் மீண்டும் மறியல்

 ரெஸ்ட்டோ பாரை மூடக்கோரி கிராம மக்கள் மீண்டும் மறியல்

திருபுவனை: திருபுவனையில் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட ரெஸ்ட்டோ பாரை மூடக்கோரி கிராம மக்கள் நேற்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால், புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. திருபுவனை மேம்பாலம் அருகில் குடியிருப்பு பகுதியில் புதிதாக ரெஸ்ட்டோ பார் கடந்த 18ம் தேதி திறக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட ரெஸ்ட்டோ பார் முன், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரெஸ்ட்டோ பாரை மூடாத நிலையில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பகல் 12:00 மணிக்கு மீண்டும் திருபுவனை நான்கு வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது அரசுக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பினர். தகவலறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெ க்டர் கீர்த்திவர்மன் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார் த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மதியம் 1:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்