உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விநாயகா மிஷன் ஆராய்ச்சி பல்கலை., கே.கே.சி.சி.எஸ்., நிறுவனத்துடன் ஒப்பந்தம்

 விநாயகா மிஷன் ஆராய்ச்சி பல்கலை., கே.கே.சி.சி.எஸ்., நிறுவனத்துடன் ஒப்பந்தம்

புதுச்சேரி: விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலைக்கழக கே.கே.சி.சி.எஸ்., இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலைக்கழகம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறை, பொறியியல் தொழில்நுட்பம், செவிலியர் என, 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பட்டய படிப்புகளை வழங்கி வருகிறது. பல்கலை., வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி மாணவர்களை உலகளாவிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயார்படுத்தவும், சர்வதேச வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கிலும் கே.கே.சி.சி.எஸ்., இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பல்கலையின் கீழ் செயலாற்றி வரும் கல்லுாரி மாணவர்களுக்கான ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் மாணவர் மேம்பாட்டு முயற்சிகளுக்கான கூட்டு கட்டமைப்பை நிறுவுதல், ஜப்பானிய மொழி திறன் மேம்பாடு, இந்தியா மற்றும் ஜப்பானில் தொழில்துறை பயிற்சி ஒருங்கிணைப்பு, மாணவர் வேலைவாய்ப்பு, ஜப்பானில் உயர்கல்விக்கு வழிவகுத்தல், மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக அளவிலான ஒத்துழைப்பு வழங்குதல் அடிப்படையாக கொண்டு கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜப் பானில் இந்திய பட்டதாரிகளுக்கு, சுகாதாரம். தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன் முன்னிலையில், இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கருணாநிதி மற்றும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளர் ராஜசேகரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். பல்கலைக்கழக தலைமை உயர் அதிகாரி சுரேஷ் சாமுவேல், ஜப்பானிய ஒருங்கிணைப்பாளர் மசுமி நரிதா ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ