| ADDED : டிச 25, 2025 05:18 AM
புதுச்சேரி: பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுசுகாதாரகோட்டம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கிருமாம்பாக்கம் பேட், நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 26ம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணிவரை கிருமாம்பாக்கம், கிருமாம்பாக்கம்பேட் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும். பாகூர்: பாகூர், பாகூர்பேட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை மறுநாள் (27ம் தேதி) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் வினியோகம் தடைபடும். இதேபோல் கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வரும் 29ம் தேதி மதியம் 12 மணிமுதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.