மேலும் செய்திகள்
ஏரிக்கரையில் பெண் உடல்; போலீசார் விசாரணை
09-Jan-2025
புதுச்சேரி : சாலையில் இரு வேறு இடங்களில் இறந்து கிடந்த இருவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி கடற்கரை சாலை அஜந்தா கெஸ்ட் ஹவுஸ் எதிரே கடந்த 5ம் தேதி 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடந்தார்.அதேபோன்று நேற்று முன்தினம் ஆம்பூர் சாலை நடைபாதையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.இருவரின் உடல்களை ஓதியஞ்சாலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தனித்தனியே வழக்கு பதிந்து இறந்த நபர்கள் யார், எப்படி இறந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.இவர்களை பற்றி தகவலறிந்தவர்கள் 0413- 2228067 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
09-Jan-2025