உள்ளூர் செய்திகள்

இறந்தவர் யார் ?

பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலை அரியாங்குப்பம் டோல்கேட் பகுதி அருகே கடந்த மாதம் 7 ம் தேதி சுமார் 45 வயது மதிக்தக்க நபர் ஒருவர் சாலையோரமாக அடிபட்ட நிலையில் கிடந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் 0413 - 2611000 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !