மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி: கவர்னர் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என எதிர்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.வெளிநடப்புக்கு பின், எதிர்கட்சி தலைவர் சிவா அளித்த பேட்டி:முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு இருந்தும், கூட்டணி குழப்பம், கவர்னர் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியின் வளர்ச்சி தடைப்படும் என்பதால் வெளிநடப்பு செய்தோம்.சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலை வரவேற்கும்விதமாக 3 ஆண்டுகளுக்கு அனுமதி இல்லாமல் துவங்கலாம் என சட்ட மாசோதா நிறைவேற்றியுள்ளது. ஆனால் புதுச்சேரியில் தொழில் துவங்குவோர்களுக்கு எந்த சிறப்பு சலுகையும் இல்லை. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய தொழிற்கொள்கை கூட அறிமுகப்படுத்தவில்லை. தொழிற்சாலை துவங்கினால் மூன்று மாதத்திற்குள் மின்சாரம் கொடுப்போம் என்று உறுதியாக சொல்லவில்லை.நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபாடு, தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தொழிற்சாலைகளை இந்த சட்ட மசோதாவில் இருக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம். ஆனால் எங்களுடைய சந்தேகங்களை காது கொடுத்து கேட்கவில்லை. இதுபோன்ற தொழிற்சாலைகள் வருகிறா என்பதை கண்காணிப்போம்.சபாநாயகர் நடுநிலையாக இல்லை. நடுநிலையாக இருந்தால் நாங்கள் ஏன் குறைகளை சொல்ல போகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago