உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேஸ்புக் விளம்பரம் பார்த்து ரூ.35,000 ஏமாந்த பெண்

பேஸ்புக் விளம்பரம் பார்த்து ரூ.35,000 ஏமாந்த பெண்

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் செம்படப்பேட்டை, புதுநகரை சேர்ந்தவர் திவ்யா. இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டிலிருந்தபடி முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி அவர், 2 லட்சத்து 17 ஆயிரத்து 310 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.லாஸ்பேட்டை கார்த்திக் ரூ. 64 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். பெரிய காலாப்பட்டு, ராகவேந்திரா நகர் ராதிகா என்பவரை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட நபர், பேஸ்புக்கில் தனது விளம்பரம் பார்த்ததற்காக பரிசு வழங்குவதாக கூறினார். அதனை பெற சுங்க கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை நம்பி அவர், 35 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். வில்லியனுார் கோகுல் 18 ஆயிரத்து 900, தட்டாஞ்சாவடி கனகவள்ளி 2 ஆயிரம், செயின்ட்பால்பேட் சரண்யா 6 ஆயிரம் என 6 பேர் 3 லட்சத்து 43 ஆயிரத்து 210 ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ