உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் மகளிர் தின விழா

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் மகளிர் தின விழா

புதுச்சேரி, : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் மகளிர் தின விழா நடந்தது.விழாவில், ஆரோவில் அறக்கட்டளை இயக்குனரும், மத்திய அரசின் கல்வி அமைச்சகம் துணைச் செயலாளருமான சுவர்ணாம்பிகை, கிராண்ட் டெக்னாலஜிஸ் நிர்வாக பங்குதாரர் மற்றும் மனிதவள மேலாளர் சித்ராதேவி, சி.ஐ.ஐ., புதுச்சேரி தலைவி கவிப்பிரியா ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.இதில், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவரின் மனைவி கீதா தனசேகரன், துணைத் தலைவரின் மனைவி கவிதா சுகுமாறன், பொருளாளர் மனைவி வைஷ்ணவி ராஜராஜன், கல்லுாரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.அகாடமிக் டீன் அன்புமலர் வரவேற்றார். விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரியின் மகளிர் மேம்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயோமெடிக்கல் துறை தலைவி விஜயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை