உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

பாகூர், : நண்பருடன் பைக்கில் சென்ற போது, நிலை தடுமாறி விழுந்த தொழிலாளி, டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.கடலுார் அடுத்த கரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தயாநிதி, 36; கடலுாரில் உள்ள டிங்கரிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை அதே பகுதி நண்பர் அன்பரசனுடன் பைக்கில் புதுச்சேரி, சோரியாங்குப்பத்திற்கு வந்தார். பின்னர் கடலுாருக்கு புறப்பட்டனர். பைக்கை அன்பரசன் ஓட்டினார். தயாநிதி பின்னால் அமர்ந்து சென்றார்.சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் சென்ற போது, நிலை தடுமாறி பைக்கிலிருந்து தயாநிதி விழுந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி தயாநிதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை