உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

பாகூர்: கடலுார் மாவட்டம், துாக்கணாம்பாக்கம் அடுத்த குட்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம், 42; கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.குடிப்பழக்கம் உடைய திருஞானசம்பந்தம், நேற்று முன்தினம் வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி, உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.கரையாம்புத்துார் அடுத்த கடுவனுார் பகுதி சாராயக்கடை பின்புறம் உள்ள ஏரியில் மூழ்கி திருஞான சம்பந்தம் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, கரையாம்புத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, மருத்துவமனை அனுப்பினர்.இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி