மேலும் செய்திகள்
ரகளை செய்த வாலிபர் கைது
11-Aug-2025
புதுச்சேரி: பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். டி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று தட்டாஞ்சாவடி பகுதியில் ரோந்து சென்றனர். மார்க்கெட் கமிட்டி அருகில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், வில்லியனுார் அடுத்த பொறையூரை சேர்ந்த மணி (எ) மணிகண்டன், 18, என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
11-Aug-2025