உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., பிரமுகர் கட்அவுட்டில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

காங்., பிரமுகர் கட்அவுட்டில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

காரைக்கால் : காரைக்காலில் காங்., பிரமுகர் பிறந்த நாள் கட்அவுட்டில் வாலிபர் ஒருவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காலி மனையில் காங்., பிரமுகரின் பிறந்த நாளுக்கு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கட் அவுட் சாரத்தில் நேற்று முன்தினம் இரவு, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் துாக்குப் போட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தகவலறிந்த காரைக்கால் போலீசார் விரைந்து சென்று, வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருந்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ