உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / சிந்து போராடி தோல்வி * ஸ்பெயின் பாட்மின்டனில்...

சிந்து போராடி தோல்வி * ஸ்பெயின் பாட்மின்டனில்...

மாட்ரிட்: ஸ்பெயின் பாட்மின்டன் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்தார்.ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை இந்தியாவின் சிந்து, 'நம்பர்-6' வீராங்கனை தாய்லாந்தின் சுபனிதாவை சந்தித்தார்.நீண்ட இழுபறிக்குப் பின் முதல் செட்டை சிந்து 26-24 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 17-21 என இழந்தார். மூன்றாவது, கடைசி செட்டில் 14-19 என பின்தங்கினார் சிந்து. பின் போராடிய இவர் 20-20 என நெருங்கினார். கடைசியில் 20-22 என நழுவவிட்டார். முடிவில் சிந்து 26-24, 17-21, 20-22 என தோல்வியடைந்தார்.அசத்திய 'கலப்பு'கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சுமீத் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் ரேஹன், லிசா அயு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 14-21, 21-11, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அஷ்வினி, தனிஷா ஜோடி, தென் கொரியாவின் லீ சியா, டெங் சன் ஜோடியிடம் 13-21, 19-21 என வீழ்ந்தது.ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடி 21-17, 21-19 என ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர், மாத்யூ ஜோடியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ