உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / இந்தியாவுக்கு 24 பதக்கம்: ஜப்பான் பாரா பாட்மின்டனில்

இந்தியாவுக்கு 24 பதக்கம்: ஜப்பான் பாரா பாட்மின்டனில்

ஷிசுவோகா சிட்டி: ஜப்பான் பாரா பாட்மின்டனில் இந்தியாவுக்கு 9 தங்கம் உட்பட 24 பதக்கம் கிடைத்தது.ஜப்பானில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 3' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 17-21, 21-19, 21-10 என ஜப்பானின் புஜிஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார். கலப்பு இரட்டையர் 'எஸ்.எல். 3 - எஸ்.யு. 5' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், மணிஷா ராமதாஸ் ஜோடி 21-19, 21-19 என சகநாட்டை சேர்ந்த நிதேஷ் குமார், துளசிமதி முருகேசன் ஜோடியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது. ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல். 3-4' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-17, 18-21, 21-16 என சகநாட்டை சேர்ந்த ஜெகதீஷ் தில்லி, நவீன் சிவகுமார் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இத்தொடரில் பிரமோத் பகத் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு பைனலில் இந்தியாவின் நவீன் சிவகுமார் 21-14, 21-14 என சகவீரர் சுகந்த்தை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எச். 6' பிரிவு பைனலில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 23-20, 21-13 என அமெரிக்காவின் மைல்ஸ் கிரேஜெவ்ஸ்கியை தோற்கடித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு. 5' பிரிவு பைனலில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் 21-15, 21-15 என சகவீராங்கனை மணிஷாவை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் 'எஸ்.எச். 6' பிரிவு பைனலில் இந்தியாவின் நித்ய ஸ்ரீ சுமதி சிவன் 21-16, 21-9 என பெருவின் ருபி மிலாக்ரோசை வீழ்த்தி தங்கம் வென்றார்.இத்தொடரில் இந்தியாவுக்கு 9 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என, 24 பதக்கம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை