கபிலா-தனிஷா ஜோடி அபாரம்
தைபே: சீனதைபே ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி முன்னேறியது.சீனதைபேயில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, சீனதைபேயின் கோ-சி சாங், யென் யு லின் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-13 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 22-20 என போராடி தன்வசப்படுத்தியது.மொத்தம் 33 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய துருவ் கபிலா, தனிஷா ஜோடி 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.ஆண்கள் ஒற்றையர் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி சுப்ரமணியன் 22-24, 12-21 என சீனதைபேயின் சுன்-யி லின்னிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன் 19-21, 19-21 என சீனதைபேயின் குவான் லின் குவோவிடம் வீழ்ந்தார்.