மேலும் செய்திகள்
உலக பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா
05-Oct-2025
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: ஷ்ரியான்ஷி கலக்கல்
05-Oct-2025
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
24-Sep-2025
புதுடில்லி: மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வகையில் 'ரீல்ஸ்' வெளியிட்ட யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங்கிற்கு எதிர்ப்பு எழுந்தது. அவர்கள் மன்னிப்பு கேட்டனர். இங்கிலாந்தில் நடந்த ஓய்வு பெற்ற வீரர்களுக்கான 'லெஜண்ட் உலக சாம்பியன்ஷிப் தொடர் பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்று சாம்பியன் ஆனது. இந்த உற்சாகத்தில் இந்திய அணியின் யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் என மூவரும் மாற்றுத் திறனாளிகளைப் போல நடந்து சென்று 'ரீல்ஸ்' வெளியிட்டனர்.இதற்கு பாரா பாட்மின்டன் வீராங்கனை மானசி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியது:தயவு செய்து மாற்றுத் திறனாளி நட்சத்திரங்களை கேலி செய்ய வேண்டாம். உங்களைப் போன்ற நட்சத்திர வீரர்கள் அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது வேடிக்கையான நிகழ்வு அல்ல. உங்களது செயலை பார்த்து பலர் சிரித்து இருக்கலாம். ஆனால் எத்தனை பேருக்கு இது பாதிப்பு தரும் என உங்களுக்குத் தெரியாது. மூன்று பேரின் செயல் எனக்கு ஏமாற்றம் தருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதையடுத்து ஹர்பஜன், ரெய்னா இணைந்து மன்னிப்பு தெரிவித்துள்ளனர். அதில்,'' யாருடைய மனதையும் காயப்படுத்த விரும்பவில்லை. தொடர்ந்து 15 நாள் கிரிக்கெட் விளையாடியதால், எங்கள் உடல் மோசமாகி விட்டது. இதை உணர்த்தவே அப்படிச் செய்தோம். ஒருவேளை நாங்கள் செய்தது தவறுதான் என நினைத்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,' என தெரிவித்துள்ளனர்.
05-Oct-2025
05-Oct-2025
24-Sep-2025