மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
12 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
ராஜ்கோட்: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1--1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது.'டாஸ்' வென்று களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 326 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா (110), குல்தீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆண்டர்சன் 'வேகத்தில்' குல்தீப் (4) அவுட்டானார். மறுபக்கம் ஜோ ரூட் சுழலில் ஜடேஜா, 112 ரன்னுக்கு அவுட்டானார். 8 வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்த போது, அஷ்வின் 37 ரன் எடுத்து அவுட்டானார். துருவ் ஜோரல் 46 ரன் எடுத்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.'டெயிலெண்டர்' பும்ரா 28 பந்தில் 26 ரன் எடுத்து கைகொடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் உட் 4, ரேஹன் அகமது 2 விக்கெட் சாய்த்தனர்.அஷ்வின் அபாரம்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட், கிராலே ஜோடி முதல் 13 ஓவரில் 84 ரன் குவித்தது. இந்நிலையில் 14வது ஓவரை வீசினார் அஷ்வின். முதல் பந்தை ஜாக் கிராலே அடித்தார். 'ஷார்ட் பைன் லெக்' பகுதியில் உயரமாக சென்ற இந்த பந்தை, ரஜத் படிதர் 'கேட்ச்' செய்ய, டெஸ்ட் அரங்கில் அஷ்வின் தனது 500 வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இதுகுறித்து அஷ்வின் கூறுகையில்,''இது எனது நீண்ட பயணம். என் வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும், ஏதாவது ஒரு வகையில் எனது தந்தை உள்ளார். ஒவ்வொரு முறை நான் விளையாடும் போதும் அவருக்கு 'ஹார்ட் அட்டாக்' வந்துவிடும். எனது பவுலிங்கை தொடர்ந்து 'டிவியில்' பார்த்து, ஆதரவு தந்தார். 500 வது விக்கெட்டை எனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்,'' என்றார்.13 ஆண்டு பயணம்தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 37. சென்னை தெருக்களில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடிய இவர், 'டாப் ஆர்டர்' பேட்டர். பின் மிகவேகப் பந்து வீச்சாளர் ஆனார். 'டீன் ஏஜில்' ஏற்பட்ட முதுகு வலி காரணமாக, அப்படியே சுழலுக்கு மாறினார். கும்ளே, ஹர்பஜன் சிங் ஆதிக்கம் முடிந்த போது, அஷ்வின் ஆதிக்கம் துவங்கியது.* கடந்த 2011ல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டில்லி டெஸ்டில் அறிமுகம் ஆனார்.* முதல் போட்டியில் 9 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகன், அடுத்து தொடர் நாயகன் ஆனார்.* தனது முதல் 16 டெஸ்டில் 9 முறை 5 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் வீழ்த்திய அஷ்வின், டெஸ்டில் அதிவேகமாக 300 விக்கெட் சாய்த்த பவுலர் ஆனார்.* 116 ஒருநாள் (156 விக்.,), 65 'டி-20' (72) போட்டியில் பங்கேற்றுள்ளார்.* ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, பஞ்சாப், டில்லி, புனே, ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடினார். டி.என்.பி.எல்., அரங்கில் திண்டுக்கல் அணியில் விளையாடுகிறார்.
12 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1