உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆசியா... பைனலில் இந்தியா * அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தியது

ஆசியா... பைனலில் இந்தியா * அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தியது

தம்புலா: ஆசிய கோப்பை பைனலுக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி. நேற்று நடந்த அரையிறுதியில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இலங்கையில் பெண்களுக்கான ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடரின் 9வது சீசன் நடக்கிறது. நேற்று தம்புலாவில் நடந்த முதல் அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங் தேர்வு செய்தார்.ரேணுகா அபாரம்வங்கதேச அணிக்கு திலாரா, முர்ஷிதா ஜோடி துவக்கம் தந்தது. இந்திய தரப்பில் ரேணுகா வேகத்தில் மிரட்டினார். போட்டியின் முதல் ஓவரின் 4வது பந்தில் திலாராவை (6) வெளியேற்றினார். அடுத்து வந்த இஷ்மா (8), ரேணுகாவிடம் வீழ்ந்தார். தொடர்ந்து அசத்திய ரேணுகா, முர்ஷிதாவையும் (4) திருப்பி அனுப்பினார்.ராதா கலக்கல்இதன் பின் சுழலில் ஜொலித்த ராதா, முதலில் ருமானாவை (1) போல்டாக்கினார். பூஜா பந்தில் ரபேயா (1) வீழ்ந்தார். மீண்டும் வந்த ராதா, இம்முறை சுல்தானாவை (32) அவுட்டாக்கினார். வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 80 ரன் மட்டும் எடுத்தது. இரட்டை இலக்க ரன்னை எட்டிய ஷொர்னா (19) அவுட்டாகாமல் இருந்தார்.இந்தியா சார்பில் ரேணுகா, ராதா இருவரும் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.எளிய இலக்குபோகிற போக்கில் எட்டிவிடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஜஹன்னாரா பந்தில் சிக்சர் அடித்த மந்தனா, நஹிதா ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசினார். நஹிதா வீசிய 11 வது ஓவரின் கடைசி 3 பந்தில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்தார் மந்தனா, 38 வது பந்தில் அரைசதம் கடந்தார். இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. மந்தனா (55), ஷபாலி (26) அவுட்டாகாமல் இருந்தனர்.ரேணுகா சாதனைசர்வதேச 'டி-20'ல் 20 வது ஓவரை இருமுறை (2019ல் வெ.இண்டீஸ், நேற்று வங்கதேசம்) மெய்டனாக வீசிய முதல் பவுலர் ஆனார் இந்தியாவின் ரேணுகா தேவி. இதற்கு முன் 9 வீராங்கனை, 8 வீரர்கள், ஒரு முறை இதுபோல வீசியுள்ளனர்.9 வது முறைஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, தொடர்ந்து 9வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக 8 சீசனில் இந்திய அணி 7 முறை சாம்பியன் ஆனது. 2018ல் வங்கதேசத்திடம் தோற்றது.10 விக்.,அரையிறுதியில் நேற்று இந்தியா, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பெண்கள் சர்வதேச 'டி-20' அரங்கில் 'நாக் அவுட்' போட்டியில் ஒரு அணி, இரண்டாவது முறையாக இதுபோல வென்றது. இதற்கு முன் பல்கான் கோப்பை பைனலில் (2022, செப். 11) ருமேனியாவை, கிரீஸ் அணி, 10 விக்கெட்டில் சாய்த்தது.* இந்திய அணி கடைசி 5 போட்டியில் 3வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை தொடரில் இதற்கு முன் எந்த அணியும் இதுபோல சாதித்தது இல்லை.3433 ரன்'டி-20' அரங்கில் அதிக ரன் எடுத்த இந்திய வீராங்கனை ஆனார் ஸ்மிருதி மந்தனா. இவர் 140 போட்டியில் 3433 ரன் எடுத்துள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் (172ல் 3415 ரன்) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ