மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
12 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
புதுடில்லி: இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் செப். 19ல் துவங்குகிறது.இந்திய அணி சொந்த மண்ணில் பங்கேற்கும் தொடர்களுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்டது. இதில் 5 டெஸ்ட், 8 'டி-20', 3 ஒருநாள் போட்டிகளில் (செப். 19 - 2025, பிப். 12) இந்திய அணி விளையாடுகிறது.வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரவுள்ள வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட், மூன்று 'டி-20' போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னையில் செப். 19-23ல் நடக்கிறது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் (செப். 27 - அக். 1) நடக்கவுள்ளது. மூன்று 'டி-20' போட்டிகள் தர்மசாலா (அக். 6), டில்லி (அக். 9), ஐதராபாத்தில் (அக். 12) நடக்கவுள்ளன.அதன்பின் நியூசிலாந்து அணி மூன்று டெஸ்டில் விளையாடுகிறது. இப்போட்டிகள் பெங்களூரு (அக். 16-20), புனே (அக். 24-28), மும்பையில் (நவ. 1-5) நடக்கின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி 5 'டி-20', 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டி-20' போட்டி சென்னையில், ஜன. 22ல் நடக்கவுள்ளது. மற்ற போட்டிகள் கோல்கட்டா (ஜன. 25), ராஜ்கோட் (ஜன. 28), புனே (ஜன. 31), மும்பையில் (பிப். 2) நடக்கவுள்ளன. ஒருநாள் போட்டிகள் நாக்பூர் (பிப். 6), கட்டாக் (பிப். 9), ஆமதாபாத்தில் (பிப். 12) நடக்கின்றன.
12 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1