மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
22 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
பெங்களூரு: பேட்டிங், பவுலிங்கில் அசத்திய பெங்களூரு அணி 47 ரன் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தியது.பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், தடை காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. டில்லி அணியை அக்சர் படேல் வழிநடத்தினார். 'டாஸ்' வென்ற இவர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
பெங்களூரு அணிக்கு கேப்டன் டுபிளசி (6) ஏமாற்றினார். கோலி 27 ரன் விளாசினார். முகேஷ் குமார் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ரஜத் படிதர், அக்சர் படேல், குல்தீப் யாதவ் பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். குல்தீப் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட வில் ஜாக்ஸ், கலீல் அகமது, ராசிக் சலாம் ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய படிதர், 29 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 32 பந்தில் 52 ரன் (3 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் (41) ஓரளவு கைகொடுத்தார்.
குல்தீப் வீசிய 17வது ஓவரில் கிரீன் 2, மஹிபால் லாம்ரர் ஒரு சிக்சர் விளாச 22 ரன் கிடைத்தன. கலீல் அகமது வீசிய 18வது ஓவரில் மஹிபால் லாம்ரர் (13), தினேஷ் கார்த்திக் (0) அவுட்டாகினர். சுவப்னில் சிங், கரண் சர்மா, முகமது சிராஜ் 'டக்-அவுட்' ஆகினர்.பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்தது. கிரீன் (32) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு வார்னர் (1), அபிஷேக் போரெல் (2) ஏமாற்றினர். பிரேசர்-மெக்குர்க் (21), ஷாய் ஹோப் (29) ஆறுதல் தந்தனர். குமார் குஷாக்ரா (2), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (3), ராசிக் சலாம் (10) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய அக்சர் படேல் (57) அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தார். முகேஷ் குமார் (3), குல்தீப் யாதவ் (6) நிலைக்கவில்லை.டில்லி அணி 19.1 ஓவரில் 140 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது.
பெங்களூருவின் விராத் கோலி, நேற்று தனது 250வது ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்றார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 4வது வீரரானார். தவிர, ஐ.பி.எல்., அரங்கில் ஒரே அணிக்காக 250 போட்டியில் விளையாடிய முதல் வீரரானார் கோலி.
ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை 'டக்-அவுட்' (18) ஆன வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் தினேஷ் கார்த்திக். அடுத்த இரு இடங்களில் மேக்ஸ்வெல் (17), ரோகித் சர்மா (17) உள்ளனர்.
22 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1