| ADDED : ஆக 22, 2024 11:41 PM
மான்செஸ்டர்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் புரூக், ஜேமி ஸ்மித் அரைசதம் விளாசினர்.இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடக்கிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 22/0 ரன் எடுத்திருந்தது. டக்கெட் (13), லாரன்ஸ் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக துவங்கியது. அசிதா பெர்னாண்டோ 'வேகத்தில்' பென் டக்கெட் (18), கேப்டன் போப் (6) வெளியேறினர். டான் லாரன்ஸ் (30), ஜோ ரூட் (42) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய ஹாரி புரூக் (59), ஜேமி ஸ்மித் அரைசதம் கடந்தனர்.ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 259 ரன் எடுத்திருந்தது. ஜேமி ஸ்மித் (72), அட்கின்சன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் அசிதா 3 விக்கெட் கைப்பற்றினார்.