உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி: கோப்பை வென்றது வங்கதேசம்

ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி: கோப்பை வென்றது வங்கதேசம்

தாகா: ஐந்தாவது 'டி-20' போட்டியில் அசத்திய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. வங்கதேச அணி 4-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியில் வங்கதேசம் வென்றது. ஐந்தாவது போட்டி தாகாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.வங்கதேச அணிக்கு மஹ்முதுல்லா (54), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (36), சாகிப் அல் ஹசன் (21), ஜாகர் அலி (24*) கைகொடுத்தனர். வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னெட் (70), கேப்டன் சிக்கந்தர் ராஜா (72*) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தனர். ஜிம்பாப்வே அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ