உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கனடாவில் கிரிக்கெட் நைட் * டி-20 உலக கொண்டாட்டம்

கனடாவில் கிரிக்கெட் நைட் * டி-20 உலக கொண்டாட்டம்

டொரன்டோ: கனடாவில் 'கிரிக்கெட் நைட்' கொண்டாட்டம் நடக்க உள்ளது. இதில் 'டி-20' உலக கோப்பை அறிமுகம் செய்யப்படும். வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வைட் பங்கேற்கிறார்.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. வரும் ஜூன் 1ல் நடக்கும் முதல் போட்டியில் அமெரிக்கா, கனடா அணிகள் மோத உள்ளன. முதல் அனுபவம்இத்தொடருக்கு கனடா அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக, கனடாவின் புளூ ஜேஸ் பேஸ்பால் அணி சார்பில் டொரன்டோவில் 'கிரிக்கெட் நைட்' (மே 10) நடக்க உள்ளது. 'டி-20' உலக கோப்பை அறிமுகம் செய்யப்பட உள்ளது. கேப்டன் சாத் ஜபார் உள்ளிட்ட கனடா அணியின் கிரிக்கெட் வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வைட் கலந்து கொள்கின்றனர். முதலில் வரும் 15,000 ரசிகர்களுக்கு புளூ ஜேஸ் அணியின் வெள்ளை நிற தொப்பி பரிசாக வழங்கப்படும். டொரன்டோ புளூ ஜேஸ் அணியின் ரசிகர் பிரிவு துணைத் தலைவர் மிச்சல் சினியுக் கூறுகையில்,''மக்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு. கிரிக்கெட், பேஸ்பால் விளையாட்டுக்கு என தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உலக முழுவதும் உள்ளனர். 'கிரிக்கெட் நைட்' கொண்டாட்டத்தில் இவ்விரு போட்டிகளின் ஒற்றுமையை ரசிகர்கள் உணரலாம். ரசிகர்கள் பெருமளவில் பங்கேற்க விரும்புகிறேன்,''என்றார்.பிராத்வைட் கூறுகையில்,''டொரன்டோ ரசிகர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். கிரிக்கெட் கொண்டாட்டத்தில் பங்கேற்று, ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை