மேலும் செய்திகள்
கோலி, ரோகித் ஒப்பந்தம் தொடரும்
14-May-2025
கொழும்பு: டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற உள்ளார் மாத்யூஸ்.இலங்கை அணியின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ் 37. கடந்த 2009ல் அறிமுகம் ஆன இவர், 118 டெஸ்டில் 8167 ரன் எடுத்துள்ளார். சங்ககரா (12,400), ஜெயவர்தனாவுக்கு (11,814) அடுத்து டெஸ்டில் அதிக ரன் எடுத்த இலங்கை வீரர் மாத்யூஸ். கடந்த 2013-17ல் இலங்கையின் மூன்று வித அணிக்கும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். தற்போது தனது 17 ஆண்டு டெஸ்ட் வாழ்க்கையில் இருந்து விடைபெற உள்ளார். வரும் ஜூன் மாதம் இலங்கை மண்ணில், வங்கதேச அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் காலேயில் (ஜூன் 17-21) நடக்கவுள்ள முதல் போட்டியுடன், மாத்யூஸ் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். ஒருநாள், 'டி-20' போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க உள்ளார். இதுகுறித்து மாத்யூஸ் கூறுகையில்,''டெஸ்ட் அரங்கில் இருந்து, மறக்க முடியாத நினைவுகளுடன், 'குட்-பை' சொல்வதற்கான நேரம் வந்து விட்டது. காலே போட்டி தான் எனது கடைசி டெஸ்ட். ஒருநாள், 'டி-20' போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளேன்,''என்றார்
14-May-2025