| ADDED : ஆக 03, 2024 11:06 PM
மும்பை: வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் ஆனது. வேகத்தில் மிரட்டிய பும்ரா, 15 விக்கெட் சாய்த்து தொடர் நாயகன் ஆனார். பும்ரா குறித்து இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 62, கூறியது:உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது, கடைசி நேரத்தில் பும்ராவை கொண்டு வந்தார் ரோகித். அப்போது நெருக்கடியான நேரத்தில் ரிஸ்வானை அவுட்டாக்கி, இந்தியா பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்.இதேபோல பைனலில் தென் ஆப்ரிக்காவின் யான்செனை அவுட்டாக்கியது, எனக்கு பிடித்த தருணமாக இருந்தது. ஏனெனில் அந்த நேரத்தில் அவரது விக்கெட், இந்தியாவுக்கு மிக முக்கிய தேவையாக இருந்தது.இதுபோல போட்டியின் முடிவை மாற்றிவிடக் கூடியவர்கள் ஒரு சிலர் தான் இருந்தனர். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் தங்களது காலத்தில் மிரட்டினர். இதேபோல ஆஸ்திரேலியாவின் மறைந்த ஷேன் வார்ன், தான் நினைக்கும் திட்டத்திற்கு ஏற்ப, பந்தை செயல்பட வைத்து விக்கெட் சாய்த்து விடுவார். பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களால் மட்டுமே, அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டும் வகையில் பந்துகளை கட்டுப்படுத்த முடியும். சமீபத்திய உலக கோப்பை தொடரில், பும்ரா இதைத் தான் சரியாக செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.