மேலும் செய்திகள்
புதிய கேப்டன் மெஹிதி ஹசன்
12-Jun-2025
புதுடில்லி: இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஜூலை 31-ஆக. 4ல் கடைசி டெஸ்டில் (ஓவல், லண்டன்) பங்கேற்கிறது. பின் வங்கதேச மண்ணில் ஒருநாள் தொடர் (ஆகஸ்ட்), பின் ஆசிய கோப்பை (செப்டம்பர்) தொடர்களில் பங்கேற்க இருந்தது. அடுத்து சொந்தமண்ணில் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான 2 டெஸ்டில் விளையாட உள்ளது.ஆனால் வங்கதேசத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, இந்தியா-வங்கதேச தொடர் ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணி வீரர்கள் சுமார் ஒரு மாதம் ஓய்வில் இருக்க நேரிடும். இதைத் தவிர்க்கும் வகையில், இலங்கைக்கு எதிரான தலா 3 போட்டி கொண்ட ஒருநாள், 'டி-20' தொடரில் பங்கேற்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மறுபக்கம் இலங்கையில் நடக்க இருந்த லங்கா பிரிமியர் லீக் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஆகஸ்ட் மாதம், இந்தியா-இலங்கை தொடர் நடக்கலாம். ஒருவேளை திட்டமிட்டபடி நடந்தால், 'டி-20' அணிக்கு இளம் வீரர்கள் அடங்கிய அணி செல்லும். ஒருநாள் தொடரில், ரோகித், கோலி என சீனியர்கள் களமிறங்கலாம். சுப்மன் கில் உள்ளிட்டோருக்கு ஓய்வு தரப்படும்.
12-Jun-2025