உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தொடரை வென்றது நியூசி., * கடைசி ஓவரில் வெ.இண்டீஸ் தோல்வி

தொடரை வென்றது நியூசி., * கடைசி ஓவரில் வெ.இண்டீஸ் தோல்வி

நேப்பியர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி நேற்று நேப்பியரில் நடந்தது. மழை காரணமாக தலா 34 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து 'பீல்டிங்' தேர்வு செய்தது. ஹோப் சதம்வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேம்பல் (4), அக்கீம் (22) ஜோடி துவக்கம் தந்தது. கீசி கார்டி (7), ரூதர்போர்டு (13), ராஸ்டன் சேஸ் (2) அடுத்தடுத்து அவுட்டாக, 86/5 ரன் என திணறியது. கிரீவ்ஸ் (22), ஷெப்பர்டு (22), போர்டே (21) சற்று உதவினர். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், பவுண்டரி மழை பொழிந்த கேப்டன் ஷாய் ஹோப், ஒருநாள் அரங்கில் 19 வது சதம் கடந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 34 ஓவரில் 247/9 ரன் எடுத்தது. ஹோப் (109), சீலஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். நாதன் ஸ்மித் 4, ஜேமிசன் 3 விக்கெட் சாய்த்தனர்.நல்ல துவக்கம்நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவிந்திரா (56), கான்வே (90) ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். வில் யங் (11), சாப்மென் (0), பிரேஸ்வெல் (11) ஏமாற்றினர். கடைசி ஓவரில் (34 வது) வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. சீலஸ் பந்து வீசினார். 'நோ பாலாக' வீசப்பட்ட 2வது பந்தில் லதாம் பவுண்டரி அடிக்க வெற்றி எளிதானது.நியூசிலாந்து அணி 33.3 ஓவரில் 248/5 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. கேப்டன் சான்ட்னர் (34), லதாம் (39) அவுட்டாகாமல் இருந்தனர். 3வது போட்டி ஹாமில்டனில் (நவ. 22) நடக்க உள்ளது.11சொந்தமண்ணில் தொடர்ந்து அதிக ஒருநாள் தொடர்களை வென்ற அணி வரிசையில் நியூசிலாந்து, 2வது இடத்தில் உள்ளது. 2019 முதல் 2025 வரை 11 தொடரில் வென்றது. முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா (2002-07ல் 17 முறை), 3வது இடத்தில் இங்கிலாந்து (2016-20ல், 9 முறை) உள்ளன.லாராவை முந்திய ஹோப்வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக, ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்களில், 'ஜாம்பவான்' பிரையன் லாராவை (125ல் 5) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷாய் ஹோப் (43 போட்டி, 6 சதம்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை