உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தனஞ்செயா, கமிந்து சதம்: இலங்கை அணி 280 ரன்

தனஞ்செயா, கமிந்து சதம்: இலங்கை அணி 280 ரன்

சில்ஹெட்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் தனஞ்செயா, கமிந்து மெண்டிஸ் சதம் கடந்து கைகொடுக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 280 ரன் எடுத்தது.வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சில்ஹெட்டில் முதல் டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்கா (2), திமுத் கருணாரத்னே (17), குசால் மெண்டிஸ் (16), மாத்யூஸ் (5), தினேஷ் சண்டிமால் (9) ஏமாற்றினர். இலங்கை அணி 57 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது. பின் இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வா (102), கமிந்து மெண்டிஸ் (102) சதம் கடந்து அணியை மீட்டனர்.இலங்கை அணி முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வங்கதேசம் சார்பில் கலீத் அகமது, நஹித் ராணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு ஜாகிர் ஹசன் (9), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (5), மோமினுல் ஹக் (5) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 32/3 ரன் எடுத்திருந்தது. இலங்கை சார்பில் விஷ்வா பெர்ணான்டோ 2 விக்கெட் சாய்த்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ